Don't have an account? Sign Up
Already have an account ? Login
மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார்: ஆனால் அதில் அவரை வழிநடத்துபவரோ ஆண்டவர்.
இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் செயலாலும் சொல்லாலும் இறப்பை வரவழைத்தார்கள்: அதை நண்பனாகக் கருதி அதற்காக ஏங்கினார்கள்: அதனோடு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
நீதிக்கு இறப்பு என்பது இல்லை.
சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை: வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை.
கடவுள் தம் மாட்சியின் ஒளியில் மகிழ்ச்சியோடும் தம்மிடமிருந்து வெளிப்படும் இரக்கத்தோடும் நீதியோடும் இஸ்ரயேலை அழைத்து வருவார்.
கடவுளின் வழியில் நீ நடந்திருந்தால் என்றென்றும் நீ அமைதியில் வாழ்ந்திருப்பாய்.--பாரூக்கு 3:13
என் பிள்ளைகளே வீறுகொள்வீர்: கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர். பகைவரின் ஆற்றலினின்றும் கைவன்மையினின்றும் அவர் உங்களை விடுவிப்பார்.
இப்பொழுதே உன்மேல் இருக்கும் அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை நான் அறுத்துவிடுவேன்.