Don't have an account? Sign Up
Already have an account ? Login
பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்: மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.
உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மன்னளினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.
ஞானத்தைத் தேடிப் பெறுவதே ஞானமுள்ள செயல்: உன் சொத்து எல்லாம் கொடுத்தாயினும் மெய்யுணர்வைத் தேடிப் பெறு.
ஞானத்தை புறக்கணியாதே: அது உன்னைப் பாதுகாக்கும்: அதை அடைவதில் நாட்டங்கொள்: அது உன்னைக் காவல் செய்யும்.
என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்: மதிப்புமிக்கவன்.
மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.
ஆண்டவர் அவர்களுக்குத் தொலையிலிருந்து தோன்றினார். உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்: எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன்.
கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருகிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.
நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்.
உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் இப்பொழுது இருப்பதைவிட ஆயிரம் மடங்கு உங்களைப் பெருகச் செய்வாராக! வாக்களித்தது போல உங்களுக்கு ஆசி வழங்குவாராக!